<p><b>தூத்துக்குடி அருகே மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.</b>&nbsp;</p><p>தூத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரம் அருகேயுள்ள செட்டிமல்லன்பட்டி கிராமம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் வேல்முருகன் (32). லாரி டிரைவர். இவரது மனைவி கற்பகவல்லி (26). இந்த தம்பதியருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். </p><p>இந்நிலையில் இன்று காலை வேல்முருகன், மனைவியை சராமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். </p><p>இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி ரூரல் ஏஎஸ்பி சந்தீஸ் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதனிடையே மனைவியை வெட்டிக் கொன்ற வேல்முருகன் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.&nbsp;</p>