<p><b>நேஷனல் ஹெரால்டு வழக்கில் மத்திய அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனின் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, கடந்த 13ம் தேதி டெல்லியில் உள்ள அதன் அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்.</b></p><p>இதனையடுத்து, தொடர்ந்து மூன்று நாட்களாக ராகுல்காந்தி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி, அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நாளை 17-06-22 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்&nbsp; நடத்திட வேண்டும் என்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பின் படி,&nbsp; தூத்துக்குடி தெற்கு,வடக்கு மற்றும் மாநகர் மாவட்டம் சார்பாக தூத்துக்குடி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.</p>