திருச்செந்தூர் வைகாசி விசாக திருவிழா பாதுகாப்பு பணிகள் - எஸ்பி நேரில் ஆய்வு
நிருபர்
June 11, 2022
திருச்செந்தூர் வைகாசி விசாக திருவிழா பாதுகாப்பு பணிகள் - எஸ்பி நேரில் ஆய்வு
<p><b style="color: rgb(255, 156, 0);">திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்.</b></p><p>திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளை (12.06.2022) வைகாசி விசாக திருவிழா நடைபெறுகிறது. இத்திருவிழாவிற்கு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.</p><p>இதனை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் வளாகம், வாகனங்கள் நிறுத்துமிடம், கடற்கரை பகுதிகள் மற்றும் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (11.06.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.</p><p>இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் கார்த்திக், திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன் மற்றும் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கௌரிமனோகரி உட்பட போலீசார் உடனிருந்தனர்.</p>