புதூர் அருகே பெண்ணிடம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!
நிருபர்
April 10, 2022
புதூர் அருகே பெண்ணிடம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!
<p><b>புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக பெண்ணிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.</b></p><p>புதூர் நல்லமூப்பன் மடம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி வசந்தா (54) என்பவருக்கும் செங்கோட்டை, தெற்கு தெருவை சேர்ந்த குருசாமி மகன் பச்சை பெருமாள் (41) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.</p><p>இந்நிலையில் நேற்று (09.04.2022) வசந்தா அவரது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த பச்சை பெருமாள் வசந்தாவிடம் தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.</p><p>இதுகுறித்து வசந்தா அளித்த புகாரின் பேரில் புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் துரை வழக்கு பதிவு செய்து பச்சை பெருமாள் என்பவரை கைது செய்தார்.</p>