செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் அஞ்சலக சேமிப்பு கணக்கு துவக்கம் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் வழங்கும்  விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்  கலந்துகொண்டு,  அஞ்சலக சேமிப்பு கணக்கை துவங்கி, கணக்கு புத்தகத்தை வழங்கினார்.

பெண் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக `செல்வமகள் சேமிப்புக் கணக்கு' (சுகன்யா சம்ரிதி யோஜனா) என்ற திட்டத்தை, 2015-ம் ஆண்டு முதல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், விளாத்திகுளம் தொகுதி, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட , அரியநாயகிபுரம், சூரங்குடி, வேம்பார் உள்ளிட்ட கிராமத்தில் , அஞ்சல்துறை கிளையில்,  பத்து வயதுக்குள் இருக்கும் பெண் குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் செல்வமகள் சேமிப்புத்  திட்டத்தின் கீழ் சேமிப்பு கணக்கைத் , தனது சொந்த செலவில்   விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்  துவக்கி அதன் வங்கி கணக்கு புத்தகத்தை வழங்கும் விழாவில்,   விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்  கலந்து கொண்டு அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகத்தை  வழங்கினார்.

இந்நிகழ்வில், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன், மாவட்ட கவுன்சிலரும் ஒன்றிய செயலாளருமான நடராஜன்,முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் - கோவில்பட்டி பாண்டியராஜ்,  துணை அஞ்சலக கண்காணிப்பாளர் சீதா லெட்சுமி,  அஞ்சல ஆய்வாளர் ( பொ)  கேத்ரபாலன், வணிக மேம்பாடு அலுவலர்கள் மாலதி, சங்கரேஸ்வரி,

முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்கள் என்.கே.பி.வரதராஜ பெருமாள், சோலை ராஜ், பொதுக்குழு உறுப்பினர் கடற்கரைவேல்,  நெல்லை மண்டல வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூட உறுப்பினர் வைப்பார் செண்பகப்பெருமாள், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணைச்செயலாளர் போடுசாமி,அம்மா பேரவை ஒன்றியச் செயலாளர்  சுபாஷ் சந்திரபோஸ், மாணவரணி ஒன்றியச் செயலாளர்  ராமநாதன்,

இலக்கிய அணி இணைச்செயலாளர் இளங்கோ, அவைத் தலைவர் முத்துச்சாமி, சுரங்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், மேல்மந்தை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்  சபாதி, தங்கமாள் புரம் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து, தாமரை, ஜேசு, அப்பணசாமி, உள்ளிட்ட கழக நிர்வாகிகள், அஞ்சல் துறை அலுவலர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள்,  குழந்தைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.