தமிழகத்தில் 27 உறுப்புக் கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றி உயர்கல்வித்துறை உத்தரவு
நிருபர்
December 12, 2020
தமிழகத்தில் 27 உறுப்புக் கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றி உயர்கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் 8 பல்கலைக்கழகங்களின் 27 உறுப்புக் கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றி உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களின் நிதிச்சுமையைக் குறைக்கவும், அவை ஆராய்ச்சியில் கவனம் செலுத்த ஏதுவாகவும் உறுப்புக் கல்லூரிகளை அரசு நிர்வகிக்க உள்ளதாகவும், அடுத்த கல்வியாண்டில் இருந்து இந்த கல்லூரிகளுக்கான செலவினங்களை அரசே ஏற்கும் என்றும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்தக் கல்லூரிகளுக்கு நடப்புக் கல்வியாண்டுக்கான செலவினங்களை அந்தந்தப் பல்கலைக்கழகங்களே வழங்க வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.