<p><b>சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், பட்டா வழங்கப்படாமல் அலைக்கழிப்பது செய்யப்படுவதை கண்டித்து&nbsp; நாளை உண்ணாவிரதம் போராட்டம் நடத்த இருப்பதாக&nbsp; அப் பெண் அதிகாரிகளுக்கு மனு அனுப்பி உள்ளார்.</b><br></p><p>சாத்தான்குளம் அருகே உள்ள கந்தசாமி புரத்தை சேர்ந்த பேச்சிமுத்து என்பவரது மனைவி சோமசுந்தரி. இவர் தனது வீட்டிற்கு பட்டா வேண்டி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். இந்த நிலையில் அந்த மனு குறித்து எந்தவித தகவலும் இல்லை . இந்நிலையில்&nbsp; முதலுரில்&nbsp; நடந்த&nbsp; மக்களுடன் முதல்வர்&nbsp; திட்ட முகாமில் மனு செய்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 1-ம் தேதி திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாரன் தலைமையிலான அதிகாரிகள் அந்த மனு மீதான விசாரணைக்கு அவரது வீட்டிற்கு வந்தனர் . அதன்பின்&nbsp; உடனடியாக பட்டா வழங்கப்படும் என உறுதி அளித்து சென்றனர். ஆனால் அதன் பின்னரும் இதுவரை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க படவில்லை. இதனால் மன வேதனை அடைந்த&nbsp; சோமசுந்தரி&nbsp; உடனடியாக பட்டா வழங்க கேட்டு&nbsp; &nbsp;நாளை( ஆகஸ்ட் 15)&nbsp; சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளார் .இது தொடர்பாக அவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், தாசில்தார் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பி உள்ளார்&nbsp; .</p>