திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் தனியார் பள்ளி மாணவனை திருமணம் செய்த ஆசிரியை சர்மிளா போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கபட்டார்.

திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரிந்தவர் சிக்கத்தம்பூரைச் சேர்ந்த ஆசிரியை சர்மிளா(வயது 26). இவரும், அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் துறையூரை சேர்ந்த மாணவனும் கடந்த 5-ந் தேதி மாயமாகினர். இதுபற்றி மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

விசாரணையில் மாணவனை ஆசிரியை சர்மிளா அழைத்து சென்றது தெரியவந்தது. இந்த நிலையில், திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் தோழியின் வீட்டில் சர்மிளா மற்றும் மாணவன் இருப்பதை கண்டுபிடித்த போலீசார் அங்கு சென்று இருவரையும் மீட்டு விசாரித்தனர்.

விசாரணையில், இருவரும் தஞ்சை பெரிய கோவிலில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து சர்மிளா மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சி மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மாணவனை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.