<p><b>மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில், தூத்துக்குடி மாணவர்கள் கலந்து கொண்டு தங்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.</b></p><p>மதுரை பாத்திமா கல்லூரி விளையாட்டு&nbsp; அரங்கத்தில் வைத்து 6.03.2022 அன்று நடைபெற்ற&nbsp; &nbsp;மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியின் தலைமை நடுவராக&nbsp; தமிழ் பாரம்பரிய சிலம்பம் பள்ளியின் பொதுச் செயலாளர் ஆசான் சுரேஷ்குமார்&nbsp; செயல்பட்டார்.</p><p>இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தை சேர்ந்த மாணவர்கள் தனித் திறமை மற்றும் சண்டை பிரிவில் பங்கேற்று&nbsp; 12 தங்கப் பதக்கமும், 5 வெள்ளிப் பதக்கமும், 4 வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்தனர்.&nbsp;</p><p>வெற்றி பெற்ற மாணவர்களை தமிழ் பாரம்பரிய சிலம்ப பள்ளியின் மாவட்ட தலைவர் செந்தில், மாவட்ட செயலாளர் முத்துராஜா, விருட்சம் சிலம்பம் பயிற்சி கூடத்தின் பயிற்சியாளர் முனியசாமி மற்றும் இசக்கிராஜா ஆகியோர் பாராட்டினர்.</p>