<p><b>தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கான&nbsp; 18வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட முருகன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்</b>.</p><p>தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28ம்தேதி தொடங்கி பிப்ரவரி 4&nbsp; இன்றுடன் முடிகிறது.</p><p>இந்நிலையில், ராஜகோபால் நகர், ஹவுசிங்போர்டு, நிகிலேசன்நகர் ஆகிய பகுதிகளை கொண்ட 18வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலரிடம் இன்று தனது வேட்பு மனு தாக்கல் செய்தார்.</p>