முத்தையாபுரம் அருகே அரசு பேருந்தில் பெண் பயணி தவறவிட்ட ரூ 22,000 பணம் ஒப்படைப்பு!
நிருபர்
January 07, 2022
முத்தையாபுரம் அருகே அரசு பேருந்தில் பெண் பயணி தவறவிட்ட ரூ 22,000 பணம் ஒப்படைப்பு!

முத்தையாபுரம் அருகே அரசு பேருந்தில் பெண் பயணி ஒருவர் தவறவிட்ட ரூ 22,000 அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடி பாத்திமா நகர் சேர்ந்த ராஜா என்பவரது மனைவி பாத்திமா. இவர் இன்று ( ஜனவரி 7) தூத்துக்குடியிலிருந்து கோவங்காடு க்கு செல்ல TN 74 N 1545 எண் கொண்ட அரசு பேருந்தில் செல்லும்பொழுது அவர் வைத்திருந்த ரூபாய் 22,000 ஆயிரம் பணம் பேருந்தில் தவறவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் முத்தையாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தவறிட்ட பணம் தங்களிடம் இருப்பதாக கூறி அப்பேருந்தின் ஓட்டுநர் ஆறுமுகச் சாமி நடத்துனர் அப்பாச்சி ஆகியோர் காவல் நிலையத்தில் காவல்துறையினர் முன்பு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

தவறிவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த அரசு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் நேர்மையை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் பாராட்டினர்.