<p><b>தூத்துக்குடியில் வருகிற டிசம்பர் 16ம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் நேரடி கூட்டம் நடைபெற உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.</b></p><p>இது தொடர்பாக <b>மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:</b></p><p>தூத்துக்குடி மாவட்டத்தில் 2021 டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 16.12.2021 அன்று காலை 10 மணி அளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முத்து அரங்கத்தில் வைத்து நேரடியாக நடைபெற உள்ளது.</p><p>எனவே, தூத்துக்குடி மாவட்ட விவசாய பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்மந்தப்பட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,&nbsp; தெரிவித்துள்ளார்.</p>