<p><b>தூத்துக்குடியில் சிறுவனிடம் செல்போனை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.</b></p><p>நேற்று (28.11.2021) தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட&nbsp; முத்துநகர் கடற்கரை பகுதியில் நின்று கொண்டிருந்த தூத்துக்குடியை சேர்ந்த 16 வயது சிறுவனிடம் இருந்து, லூகாஸ் கிளின்டன் (23)&nbsp; த/பெ. பிச்சையா புதுத்தெரு தூத்துக்குடி&nbsp; என்பவர் செல்போனை பறித்து&nbsp; சென்றுள்ளார்.</p><p>இதுகுறித்து மேற்படி 16 வயது சிறுவன் அளித்த புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்&nbsp; சிவராஜா வழக்குப்பதிவு செய்து மேற்படி&nbsp; நபரான லூகாஸ் கிளின்டனை கைது செய்து அவரிடம் இருந்து திருடப்பட்ட ரூபாய் 16,000/- மதிப்பிலான செல்போனையும் பறிமுதல் செய்தார்.</p>