தமிழகத்தில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிலவும் சூழல் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், பிரதமர் நரேந்திரமோடி தொலைபேசி வழியாக ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்துக்கு தேவையான அனைத்து ஆதரவையும் மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். புயலால் பாதிக்கப்படும் இடங்களில் உள்ள மக்களின் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் தான் பிரார்த்திப்பதாகவும் மோடி பதிவிட்டுள்ளார்.

அதே போன்று கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்று உறுதி அளித்துள்ளார்.