தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று (25.04.2025) தூத்துக்குடி நகர உட்கோட்ட பகுதிகளுக்கு ரோந்து மேற்கொண்டு அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டிருந்தும் காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகள் குறித்தும் கலந்துரையாடினார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்  நேற்று (25.04.2025) தூத்துக்குடி நகர உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளான டூவிபுரம், காய்கனி மார்க்கெட், பூ மார்க்கெட், மீனாட்சிபுரம் மற்றும் 4ம் கேட்  ஆகிய இடங்களுக்கு ரோந்து மேற்கொண்டு அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தும்,  சந்தேகப்படும்படியாக சட்ட விரோத செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் காவல்துறையினருக்கு தயங்காமல் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் மேலும் காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகள் குறித்தும் பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வின் போது மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.