தூத்துக்குடியில் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை : வாலிபர் கைது!
நிருபர்
September 06, 2021
தூத்துக்குடியில் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை : வாலிபர் கைது!
<p><b>தூத்துக்குடியில் 16 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்ச்சி செய்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.</b></p><p>இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:</p><p>தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் மகன் மாரிமுத்து (23). இவர் கடந்த 26.08.2021 அன்று 16 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். </p><p>இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்யப்பட்டார்.</p>