நடிகர் விஜய் நடிக்கும் 65ஆவது திரைப்படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’  மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 65வது திரைப்படத்திற்கு பீஸ்ட் பெயரிடப்பட்டுள்ளது. விஜயின் 47ஆவது பிறந்த நாளையொட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி உள்ளன.

பீஸ்ட் என்ற சொல்லுக்கு அசுரத்தனமான பெரிய மிருகம் என்று பெயர் என்று பொருள். ஏற்கனவே விஜய்யின் ஆங்கிலச்சொல் தலைப்புகளாக லவ் டுடே, ஒன்ஸ்மோர், பிரண்ட்ஸ் ,யூத் ,மாஸ்டர் என படங்கள் வெளியான நிலையில் 6-வது படமாக பீஸ்ட் வெளியாக உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முதல் கட்டமாக நடந்து முடிந்த நிலையில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். அதேபோல் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.