• vilasalnews@gmail.com

மீண்டும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறப்பு... இறுதி கட்டத்தை எட்டியுள்ள விசாரணை...மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற அதிமுக கவுன்சிலர் கோரிக்கை!

  • Share on

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் செயல்பட தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற, அதிமுக மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மந்திர மூர்த்தி, மாமன்ற கூட்டத்தில் வலியுறுத்தினார்.


தூத்துக்குடி மாநகராட்சியில் சாதாரண கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில், அதிமுக மாமன்ற எதிர்கட்சி கொறடாவும், மாமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான மந்திர மூர்த்தி பேசுகையில்:-

ஸ்டெர்லைட் ஆலை மீதான தடை உத்தரவை நீக்கி, ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

அனைத்து தரப்பினரின் வாதங்களும் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் ஒரு நிபுணர் குழுவை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்கிற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கை திட்டமிட்ட நடவடிக்கையாகவே தெரிகிறது. 

ஆகவே, தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமோ என்ற அச்ச உணர்வு தூத்துக்குடி மக்களுக்கு எழுந்துள்ளது. ஆகவே, தூத்துக்குடி மக்களின் அச்ச உணர்வை போக்கிடும் வகையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்று மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.


இதற்கு பதிலளித்த மேயர் ஜெகன் பெரியசாமி, " ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரும் மனு மீது தமிழக அரசின் சார்பில் கடுமையான எதிர்வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடும்"  என கூறினார்.

இதனையடுத்து, மாமன்ற கூட்டத்தில் வார்டு பிரச்சனை மட்டும் பேசுங்கள், இங்கே ( மாமன்ற கூட்டத்தில்) தீர்மானத்தை நிறைவேற்றினால் ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிடுவார்களா? திறக்க முடியாதா?  என ஸ்டெர்லைட் குறித்த அதிமுக கவுன்சிலர் மந்திர மூர்த்தியின் பேச்சுக்கு திமுகவை சேர்ந்த ஓரிரு மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட இளஞ்சிறார் உட்பட 4 பேர் கைது!

ஆதனூர் கிராமத்தில் 33 வது ஆண்டு மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றம்

  • Share on

அண்மை பதிவுகள்