• vilasalnews@gmail.com

3வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா!

  • Share on

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 ஆவது முறையாக கோப்பையை வென்றது.


ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமாதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தார் . இதையடுத்து  முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்தது.


இந்திய அணியில் சஞ்சு சாம்சன் 46 பந்துகளுக்கு 89 ரன்கள் குவித்து அசத்தினார். அதே போல அபிஷேக் சர்மா, 21 பந்துகளில் 52 ரன்களும் இஷான் கிஷன் 25 பந்துகளில் 54 ரன்களும் விளாசினர் குவித்தார். இதனை தொடர்ந்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கிய நியூசிலாந்து 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தோல்வியை தழுவியது. இதன்மூலம் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்திய அணி சார்பில் பும்பரா 4 விக்கெட்டுகளையும், அக்சார் பட்டேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


தோனி தலைமையில் 2007 ஆம் ஆண்டும், ரோகித சர்மா தலைமையில் 2024 ஆம் ஆண்டும் இந்தியா டி 20 உலககோப்பையை வென்ற நிலையில் தற்போது சூர்யகுமார் யாதவ் தலைமையில்  3வது முறையாக இந்தியா அணி டி 20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.


அதே போல இந்திய அணி  2024 மற்றும் 2026 ஆகிய இரண்டு முறை தொடர்ந்ந்து கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

  • Share on

அது அவுட் இல்ல செல்லம் - மைதானத்தில் மனைவியை கலாய்த்த தோனி: வைரலாகும் க்யூட் வீடியோ!

  • Share on