• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

ஐபிஎல்- கடைசி பந்தில் சென்னை அணி த்ரில் வெற்றி!

  • Share on

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையில் அபுதாபியில் நடைபெற்றது.

இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் மோர்கன் டாஸ் வென்று  பேட்டிங் தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெய்ன் பிராவோ இடம் பெறவில்லை. அதற்குப் பதிலாக சாம் கர்ரன் இடம் பிடித்தார்.  

கொல்கத்தா அணியின் ஷுப்மான் கில், வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஷுப்மான் கில் முதல் ஓவரில் இரண்டு பவுண்ரிகள் விளாசினார். என்றாலும், கடைசி பந்தில் ரன்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். 

அடுத்து வந்த ராகுல் திரிபாதி சிறப்பாக விளையாடினார். முதல் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் அய்யர் 18 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். கொல்கத்தா முதல் 6 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்திருந்தது.

கேப்டன் மோர்கன் 8 ரன்னில் வெளியேறினார். அரைசதம் நோக்கிச் சென்ற ராகுல் திரிபாதி 33 பந்தில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த்ரே ரஸல் 15 பந்தில் 20 ரன்கள் எடுத்து க்ளீன் போல்டானார். ரஸல் ஆட்டமிழக்கும் போது கொல்கத்தா 16.4 ஓவரில் 125 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்தி அதிரடியாக விளையாடி 11 பந்தில் 26 ரன்கள் அடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் அடித்துள்ளது. நிதிஷ் ராணா 27 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷர்துல் தாகூர், ஹசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 172 ரன்கள் இலக்குடன் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்றது. 

வழக்கம் போல் தொடக்க வீரர்கள் ருத்ராஜ், டூப்ளசிஸ் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரின் முறையே 40, 43 ரன்னிலும் அடுத்து வந்த மொயின் அலி 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த வீரர்கள் தோனி, ரெய்னா, ராயுடு, கரண் ஆகியோர் சொதப்பியதால் கடைசி நேரத்தில் ஜடேஜா அதிரடி காட்டினார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியை நெருங்கியது. 

எனினும் கடைசி ஓவரில் ஜடேஜா 8 பந்துகளில் 22 ரன்னில் ஆட்டமிழந்த தால் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி பந்தில் 1 ரன் தேவை என்ற நிலையில் தீபக் சாகர் ஒரு ரன் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு சென்றனர். 

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட்.. பச்சைக்கொடி காட்டிய தாலிபான்கள்.. முதல் தொடரே பாகிஸ்தான் அணியுடன் தான்!

தூத்துக்குடி டேக்வாண்டோ ராமலிங்கபாரதிக்கு பாராட்டு!

  • Share on