• vilasalnews@gmail.com

ஸ்ரீ ராமருக்கும் தூத்துக்குடிக்கும் இருக்கும் தொடர்பு பற்றி தெரியுமா? அப்படியொரு புண்ணிய ஸ்தலம் இங்கு இருக்கு!

  • Share on

ராவணனை அளிக்க ஸ்ரீராமபிரான் தென் திசை வந்த போது புராண காலத்தில் திருஆறை என்று அழைக்கப்பட்ட இன்றைய கயத்தாறு ஸ்தலம் வந்து இங்கு தன் அம்பினால் நிலத்தை கீறி ஒரு கோடு உண்டாக்கி அதிலிருந்து ஒரு தீர்த்தம் உருவாக்கினார். பின் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு பின் சிவபெருமானிடம் இருந்து கோதண்டம் என்ற ஆயுதத்தை பெற்றுச் சென்றார்.

எனவே இங்குள்ள சிவபெருமானுக்கு கோதண்டராமலிங்கேஸ்வரர் என்ற திருநாமம் உண்டானது. தீர்த்தமும் கோடி லிங்க தீர்த்தம் என்றானது. இக்கோவில் ராமேஸ்வரத்திற்கு முந்திய கோவில் என திருஆறை புராணம் கூறுகிறது. இதற்கு மேலும் ஆதாரமாக ராமபிரான் லிங்க பூஜை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது.

மேலும், அம்பு நிலத்தைக் கீறியதில் உள்ளிருந்து ஊற்று ஒன்று பெருகி வந்து ஆறாக ஓடத் தொடங்கியது. அந்த ஆறு 'கசந்த ஆறு’ என்று அழைக்கப்பட்டது. அதுவே அந்த ஊரின் பெயராகவும் ஆனது. அதுவே காலப்போக் கில் மருவி ‘கயத்தாறு’ என்றானதாக கூறப்படுகிறது.

ஊற்று ஏற்படுத்த கோதண்டத்தை ராமபிரான் வளைத்த போது, ஸ்ரீராமருடைய பாதங்கள் அழுந்திய பாறை யில் அவருடைய இரு பாதங்கள் பதிந்து இருப்பதாக தல புராணம் சொல்கிறது. அந்தப் பாறையில் உள்ள ராமர் பாதத்தை இன்றும், பக்தர்கள் பக்தி சிரத்தையுடன் வழிபாடு செய்து வருகிறார்கள்.

  • Share on

ஜெய் ஸ்ரீ ராம்... நாடு முழுவதும் மக்கள் கொண்டாட்டம் - அயோத்தியில் கோலாகலம்

தைப்பூசத்தில் ஏன் முருகன் கோவில்களில் பக்தர்கள் குவிகின்றனர்?

  • Share on