• vilasalnews@gmail.com

2,799 ரூபாய்க்கு 4 ஜி மொபைல் வெளியானது!

  • Share on

நோக்கியா மொபைல் போன்களைத் தயாரிக்கும் ஹெச் எம் டி குளோபல் நிறுவனம், புதிய அடிப்படை வசதிகள் கொண்ட 4ஜி மொபைல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

நோக்கியா 110 4ஜி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மாடலின் விலை ரூ.2,799 ஆகும். இன்று முதல், மஞ்சள், ஆக்வா, கருப்பு ஆகிய நிறங்களில் அமேசான் இணையதளத்திலும், நோக்கியாவின் தளத்திலும் இந்த மொபைல்கள் கிடைக்கும். எஃப் எம் ரேடியோவை ஹெட்செட் இல்லாமல் கேட்கும் வசதி, எம்பி3 ப்ளேயர், 32 ஜிபி வரை மெமரி கார்ட் பயன்படுத்தும் வசதி இருக்கிறது. இதன் பிரதான கேமரா 0.8 மெகா பிக்ஸல் அளவில் க்யூவிஜிஏ (qvga) வடிவில் இடம்பெற்றுள்ளது.

வயதானவர்களுக்கு வசதியாக, திரையில் தோன்றும் எழுத்துகளைத் தானாகப் படித்துக் காட்டும் வசதியும் இதில் உள்ளது. பேட்டரி 1020 எம்ஏஹெச் திறன் கொண்டது. 4ஜி மாடல் என்பதால் அழைப்புகளில் குரல் துல்லியம் அதிகமாக இருக்கும் என்று நோக்கியா தெரிவித்துள்ளது. பிரபலமான ஸ்னேக் விளையாட்டு எனப் பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த மாடலில் பிரதானமாக இடம்பெற்றுள்ளன.

  • Share on

70 கிலோமீட்டர் வேகம்...ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை பயணம்...புதிய பைக்!

ரூ.915ல் விமானத்தில் பயணிக்கலாம்.. எங்கு.. எப்போது பயணிக்கலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!

  • Share on