தூத்துக்குடியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டம்
நிருபர்
June 12, 2021
தூத்துக்குடியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டம்
<p><b>தூத்துக்குடியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</b></p><p>நாட்டில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், அதனை கட்டுப்படுத்த தவறிய மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்தும் தூத்துக்குடி சிதம்பர நகரில் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><p>மாநகர செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாவட்டக்குழு குமாரவேல் , ஒன்றியச்செயலாளர் சங்கரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் முத்து,</p><p>மாநகரக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், முத்துகிருஷ்னன், தசலிஸ் மற்றும் நாகராஜ், டென்சிங், செல்வம், காஸ்ட்ரோ, ஜேம்ஸ், பாலா, ஆவடையப்பன், முருகன், அலாய்சிஸ், நாகராஜன், தாமோதரன், வரதன், மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>