' கருப்பன் குசும்புக்காரன்' நடிகர் தவசி காலாமனார்!
நிருபர்
November 23, 2020
' கருப்பன் குசும்புக்காரன்' நடிகர் தவசி காலாமனார்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் தவசி காலமானார். அவருக்கு வயதுக்கு 60

'கிழக்குச் சீமையிலே' படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார் தவசி. நடிகர் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' திரைப்படத்திலும் தவசி நடித்துள்ளார்.

தமிழில் 50க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். தேனி மாவட்டம் சங்கராபுரத்தை பூர்விகமாக கொண்டவர் தவசி.

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு அப்பாவாக நடித்தவர் நடிகர் தவசி. இந்தப் படத்தில் இடம்பெற்ற 'கருப்பன் குசும்புக்காரன்' என்ற டயலாக்கின் மூலம் பெரும் பிரபலமானார்.

தொடர்ந்து அழகர்சாமியின் குதிரை, கருப்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த தவசி, உணவுக் குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணனுக்கு சொந்தமான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மீசை தாடி எதுவும் இல்லாமல் மொட்டை அடித்து உடல் மெலிந்து போயிருக்கும் தவசியின் போட்டோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் நடிகர் தவசியா இது அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்கு பண உதவி கேட்டு தவசி வேண்டுகோள் விடுத்த வீடியோவும் வைரலானது. இதனை பார்த்த நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, சூரி உள்ளிட்ட பலரும் அவருக்கு நிதியுதவி செய்தனர்.

இந்நிலையில் நடிகர் தவசியின் உடல் நிலை இன்று மேலும் மோசமடைந்தது. இதனை தொடர்ந்து சற்று முன் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவு ரசிகர்கள், திரைத்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.