தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சூழவாய்க்கால் கிளை சார்பில்  கொரோனா பேரிடர் காலத்தில் நோயாளிகள் பயன்பெறும் வகையில் ரத்ததான முகாம்  சூழவாய்க்கால் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.

முகாமிற்கு, மாவட்ட துணைத்தலைவர் தமீம் அன்சாரி தலைமை வகித்தார். கிளை பொருளாளர் இம்ரான் வரவேற்றார்.  ஏரல் சப்-இன்ஸ்பெக்டர்  ராஜாமணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முகாமினை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் இஸ்லாமியர்களின் தன்னார்வமிக்க தொண்டுகளையும், கொரோனா  பாதிப்பினால் இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்து வரும் செயலையும்  பாராட்டினார்.

தூத்துக்குடி அரசு பொதுமருத்துவமனை ரத்தப் பிரிவு மருத்துவர் சாந்தி ரத்ததானத்தின் அவசியத்தையும், அன்றாடம் தேவைப்படுகிற ரத்த தேவையையும் கூறி கொரோனா  நோயாளிகளை பராமரிப்பதின் மூலம் நாளும் அடைகிற மன அழுத்தத்தையும் எடுத்து சொல்லி அறிவுரை வழங்கினார்.

இதில், மாவட்ட துணை செயலாளர்கள் சிக்கந்தர், இமாம்பரீத், மருத்துவர் அணி செயலாளர் ரசீத் காமில், சூழவாய்க்கால் கிளைத்தலைவர் கஸ்ஸாலி, துணைத்தலைவர் பாஸித், துணை செயலாளர் ஜாவித் மற்றும்  ரியாஜ் ஸலாஹுத்தீன், இஜாஸ்,  நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முகாமில், சூழவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் வேங்கையன் மற்றும் ஊர் பொதுமக்கள் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டு ரத்ததானம்  செய்தனர்.