தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்த வாலிபரை கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரை பகுதியில் கடலோர காவல் உதவி ஆய்வாளர்  முத்துமாரி தேவேந்திரன் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்த தூத்துக்குடி லூர்தம்மாள் புரத்தைச் சேர்ந்த முகமது நபிக் மகன் சேக்  மைதீன் என்கிற சித்திக் (28) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 50 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, வனத்துறையிடம் ஒப்படைக்கப் பட்டது. இது தொடர்பாக மேலும் 2பேர் தேடி வருகின்றனர்.