செய்தியாளர் To சட்டமன்ற உறுப்பினர் : தவெக எம்.எல்.ஏ ஜெகதீஸ்வரி!
நிருபர்
May 10, 2026
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் தேர்தல் களத்திலேயே 108 இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இதில் இராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட விஜய்யின் தீவிர ரசிகையும், பத்திரிகையாளருமான ஜெகதீஸ்வரி, திமுக வேட்பாளரை 10,605 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அ

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம்கண்ட தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் (விஜய் இரு தொகுதிகள்) வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்றவர்களுள் 13 பெண்களும் அடங்குவர்.

ஜோதிடர், ஆசிரியர், சுயதொழில் செய்பவர்கள், பத்திரிக்கையாளர் என பலதரப்பட்ட பெண்களும் அதில் அடங்குவர். அவர்களுள் சில பெண்கள் முன்னாள், இந்நாள் அமைச்சர்களையும் தோற்கடித்துள்ளனர். அந்த வகையில் விஜய் தீவிர ரசிகராக இருந்த பெண் செய்தியாளர் ஜெகதீஸ்வரி என்பவர் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினராக ஆகியுள்ளார்.

பிஎஸ்சி பட்டதாரியான ஜெகதீஸ்வரி, போலீஸ் டூடே என்ற இதழில் தலைமை நிருபராகவும், மாலை நியூஸ், மக்கள் ஆணையம் ஆகியவற்றில் செய்தி ஆசிரியராகவும் இருந்ததோடு, சிறந்த பத்திரிகையாளர் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றத்தில் சில காலம் உறுப்பினராகவும் இருந்தார்.

விஜயின் முகத்தை தனது கைகளில் வரைந்து பச்சைக்குத்துகொண்டு இருக்கும் அளவிற்கு அவரது தீவிர ரசிகையான ஜெகதீஸ்வரி, தளபதி விஜய் மக்கள் இயக்கத்தில் நகர மகளிரணி பொறுப்பில் தொடங்கி, மாவட்ட மகளிரணி தலைவியாக தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழகத்தில் விருதுநகர் தென்மேற்கு மாவட்ட செயலாளராக கட்சியில் படிப்படியாக உயர்வு பெற்றார்.

இவரின் விசுவாசமும், கட்சி மற்றும் மக்கள் பணிகளில் காட்டிய தீவிர செயல்பாடுகள் காரணமாக, ஜெகதீஸ்வரி இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் வேட்பாளராகவும் களம் கண்டார்.

முதல் முறையாக இராஜபாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட ஜெகதீஸ்வரி, 10,605 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் தங்கபாண்டியனை தோற்கடித்து வெற்றி பெற்று தற்போது சட்டமன்ற உறுப்பினராக ஆகியுள்ளார்.