கடலோர மக்களின் பாதுகாப்பிற்காகவும், அவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றிக்கொடுப்பதிலும், எம்ஜிஆர் காலம் முதல் அம்மா ஆட்சி தொடர்ந்து, எடப்பாடியார் வரை அதிமுக ஆட்சி உறுதியாக இருக்கும் என தூத்துக்குடி தேர்தல் பரப்புரையில் பொதுமக்களிடம்  சி.த.செல்லப்பாண்டியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 23 அன்று சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையடுத்து ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் தமிழகத்தில் திமுக, அதிமுக, நாதக, தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.

இதனையடுத்து, தூத்துக்குடி தொகுதியில் அதிமுக திமுக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் வீடு வீடாக சென்று இரட்டை இலைக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக இன்று ( ஏப்ரல் 10, 2026 ) காலை தூத்துக்குடி லூர்தம்மாள்புரம், சங்குகுளி காலனி, மேட்டுப்பட்டி, ராஜீவ் காந்தி நகர், அலங்காரதட்டு, செயின்ட் மேரிஸ் காலனி, தஸ்நேவிஸ் நகர், ஜான் சேவியர் நகர், கலைஞர் நகர், பொன் சுப்பையா நகர் உள்ளிட்ட பகுதிகளில், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன், கடலோர மக்களின் பாதுகாப்பிற்காகவும், அவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றிக்கொடுப்பதிலும், எம்ஜிஆர் காலம் முதல் அம்மா ஆட்சி தொடர்ந்து, எடப்பாடியார் வரை அதிமுக ஆட்சி உறுதியாக இருக்கும் என தூத்துக்குடி தேர்தல் பரப்புரையில் பொதுமக்களிடம்  சி.த.செல்லப்பாண்டியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.