தூத்துக்குடி தொகு​தி​யில் திமுக, அதி​முக, நாம் தமிழர் மற்​றும் தமிழக வெற்​றிக் கழகம் ஆகிய கட்​சிகளிடையே நில​வும் 4 முனைப் போட்​டி​களுக்கு நடுவே அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் தேர்தல் பரப்புரை விறு​விறுப்​படைந்​துள்​ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். இதனையடுத்து, போல்பேட்டை, குறிஞ்சி நகர், தனசேகரன் நகர், காசிராஜன் நகர், செல்வ விநாயகபுரம், நந்தகோபாலபுரம், TMC காலனி, அழகேசபுரம், நடராஜ புரம், சுந்தரராமபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று ( ஏப்ரல் 9,2026 ) மாலை விறுவிறுப்பான பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, அதி​முக வேட்​பாளர் சி.த.செல்லப்பாண்டியன், திமுக அரசின் மீதான விமர்​சனங்​களை முன்​வைத்து பிரச்​சா​ரம் செய்​தார். “கடந்த 5 ஆண்​டு​களில் தொகு​தி​யில் எந்த வளர்ச்​சிப் பணி​களும் நடை​பெற​வில்​லை. மக்​களின் அடிப்​படைத் தேவை​கள் புறக்​கணிக்​கப்​பட்​டுள்​ளன. அதி​முக ஆட்​சிக் காலத்​தில் இருந்த பொற்​கால திட்​டங்​கள் மீண்​டும் கிடைக்க எனக்கு வாக்​களி​யுங்​கள்” என பிரச்சாரம் செய்தார்.