மது, பணம், பரிசுப் பொருட்கள் : தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படையினரிடம் சிக்கியது எவ்வளவு?
நிருபர்
March 20, 2026
மது, பணம், பரிசுப் பொருட்கள் : தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படையினரிடம் சிக்கியது எவ்வளவு?

இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் - 2026 வருகின்ற 23.04.2026 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 24 மணி நேரமும் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், தேர்தல் நடத்தை விதிமீறல்களை தடுக்கவும். தேர்தல் நடத்தை விதிமீறல்களில் எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை கைப்பற்றும் பணிகளில் இக்குழு ஈடுபட்டு வருகின்றன.

இன்று (20.03.2026) வரை பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரால் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் விவரம்:-

உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட மொத்த ரொக்கத் தொகை - ரூ.20,43,380

கைப்பற்றப்பட்ட இலவச பொருட்களின் மதிப்பு - ரூ.20,280

பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு - ரூ.15,647

உரிய ஆவணங்களை சமர்பித்து விடுவிக்கப்பட்ட ரொக்கத்தொகை ரூ.6,54,600

என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.