தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் காவல்துறையினர் ரோந்து மேற்கொண்டு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினரின்  பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் இன்று (05.03.2026) நேரில் சென்று ஆய்வு செய்து, சந்தேகத்திற்கிடமாக வரும் நபர்களை சோதனை செய்தும், குற்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் பொருட்டு  தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார்.