திருச்செந்தூர் கட்டபொம்மன் மடத்தில் கட்டபொம்மன் நாயக்கர் மண்டகப்படி மாசி திருவிழா : பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்குழு அழைப்பு!
நிருபர்
February 28, 2026
திருச்செந்தூர் கட்டபொம்மன் நாயக்கர் மடத்தில் கட்டபொம்மன் மண்டகப்படி மாசி திருவிழா : பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்குழு அழைப்பு!

திருச்செந்தூர் கட்டபொம்மன் மடத்தில் நாளை மார்ச் 1 ஆம் தேதி நடைபெறும் முருகப் பெருமானின் மாசி திருவிழா 9-வது நாள் கட்டபொம்மன் நாயக்கர் மண்டகப்படி விழாவில் பொதுமக்கள், ஆன்மீக அன்பர்கள், கட்டபொம்மன் வம்சாவளியினர் என அனைவரும் திரளாக கலந்து கொள்ள பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

பாஞ்சாலங்குறிச்சி மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் முன்னோர்களால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக திருச்செந்தூரில் பராமரிக்கப்பட்டு வரும் கட்டபொம்மன் மடம், முருகப் பெருமானின் 9-வது மண்டகப்படி விழாவிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த மடத்தை இத்தனை ஆண்டுகள் கட்டபொம்மன் மண்டகப்படிக்கு பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது அங்கு மண்டகப்படி நடத்த அறநிலையத்துறை இணை ஆணையர் தடை விதித்துள்ளார். இதற்குப் பதிலாக அருகில் உள்ள சிவன் கோயிலில் நிகழ்ச்சியை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாஞ்சாலங்குறிச்சி வீரசக்க தேவி ஆலய குழுவினர் சென்னை மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து வழக்கம் போல கட்டபொம்மன் மடத்தில் வைத்தே மாசி திருவிழா 9-வது நாள் கட்டபொம்மன் நாயக்கர் மண்டகப்படி விழா நடந்த தமிழக அரசிடம் அனுமதி வாங்கித்தர கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்துப் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா கட்டபொம்மன் மண்டகப்படி தொடர்பான கோரிக்கையை குறித்து பேசினார்.

மார்ச் 1-ம் தேதி திருச்செந்தூர் கோயிலில் மண்டகப்படி நடைபெற உள்ளதால், இணை ஆணையரின் தடையை ரத்து செய்து, வழக்கம்போல கட்டபொம்மன் மடத்திலேயே மண்டகப்படி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வைகோவின் கோரிக்கையை கனிவுடன் கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து, தற்போது இணை ஆணையரின் தடையை ரத்து செய்து, வழக்கம்போல கட்டபொம்மன் மடத்திலேயே மண்டகப்படி நடத்த அனுமதி இணை ஆணையரால் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, வழக்கம் போல, திருச்செந்தூர் கட்டபொம்மன் மடத்தில் நாளை மார்ச் 1 ஆம் தேதி நடைபெறும் முருகப் பெருமானின் மாசி திருவிழா 9-வது நாள் கட்டபொம்மன் நாயக்கர் மண்டகப்படி விழாவில் பொதுமக்கள், ஆன்மீக அன்பர்கள், கட்டபொம்மன் வம்சாவளியினர் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு திருச்செந்தூர் முருகனின் அருள் பெற்றுச்செல்ல பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.