மகளிருக்கு கோடை கால சிறப்புத் தொகையாக இந்த ஆண்டு மட்டும் ரூ.2000 வழங்கப்பட்டது ஏன்? என்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பதில் அளித்தார். அவர், இனி எல்லா ஆண்டுகளிலும் கோடை கால சிறப்புத் தொகையாக மகளிருக்கு ரூ.2,000 வழங்கப்படும் என தெரிவித்தார்.

கோடை காலம் வரவுள்ளதால், வெயில் தாக்கத்தால் மக்களுக்கு மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், இந்த கோடைகால சிறப்பு தொகை வழங்கப்படுவதாக விளக்கமளித்துள்ளார். இது பெண்களிடம் கவனம் பெற்றுள்ளது.