ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா திறந்து வைத்த புதிய கலையரங்குகள் - பொதுமக்கள் மகிழ்ச்சி!
நிருபர்
February 10, 2026
ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒட்டப்பிடாரம் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய கலையரங்குகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேல லெட்சுமிபுரம் கிராமத்திற்கும், மேட்டூர் கிராமத்திற்கும் தலா 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கலையரங்கத்தை எம்.எல்.ஏ சண்முகையா ரிப்பன் வெட்டித் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார். இந்தத் திறப்பு விழாவில் அரசு அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாச்சலம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கனகவள்ளி, உதவி பொறியாளர் செல்வபாக்கியம், கிராம நிர்வாக அலுவலர் தர்மராஜ், ஊராட்சி செயலர் ராமலிங்கம், அரசு ஒப்பந்ததாரர் முருகன், மேட்டூர் பகுதியைச் சேர்ந்த கல்யாணராஜ், கனகராஜ், தெற்கு ஆவராங்காடு கிருஷ்ணசாமி மற்றும் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புதிய கலையரங்கம் கட்டித் தரப்பட்டதற்காக அந்தந்த கிராம மக்கள் சட்டமன்ற உறுப்பினருக்குத் தங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.