தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் இளம்பெண் ஒருவர் திடீரென மாயமானதைத் தொடர்ந்து அதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள  கழுகுமலை  அமல்ராஜ் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் மகாலெட்சுமி (16), இவர் கடந்த 07.03.2021 (ஞாயிற்று கிழமை) அன்று அருகில் உள்ள கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.

அதன் பின்னர், வெகு நேரமாகியும் அப்பெண் திரும்பவில்லை. இதனையடுத்து, அப்பெண்ணின் குடும்பத்தினர் பல்வேறு பகுதிகளில் தேடிப்பார்த்தும்  அவரைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

இதனையடுத்து, இதுகுறித்து கழுகுமலை காவல் நிலையத்தில் அப்பெண்ணின் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்