திருச்செந்தூரில் பிறந்து சில நிமிடங்களில் பச்சிளம் குழந்தையை இளம்பெண் குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், அமலிநகரை சேர்ந்த இளம்பெண்  ஒருவர் தனியார் மருத்துவமனை கழிவறையில்  குழந்தையை பெற்று சில நிமிடத்தில் அங்குள்ள குப்பை தொட்டியில் வீசிச் சென்றுள்ளார். திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்த இளைஞருடன் நெருங்கி பழகியதால் அவர் கர்ப்பமானதாக கூறப்படுகிறது.

இதனால் இருவரது  வீட்டிற்கும் தெரியாமல்  தனியார் மருத்துவமனையில் குழந்தையை பெற்று கழிவறையில் வீசியுள்ளார். இறந்த நிலையில் குழந்தையை போலீசார் மீட்டனர். சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.