வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி இந்த விருப்ப மனு கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி வரை நடக்கிறது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து  ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்து விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாணியில், வரக்கூடிய 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களையும் புது முகங்களையும் களத்தில் இறக்கி வெற்றி பெற வைக்கும் முடிவில் அதிமுக பொதுச்செயலாரும் தமிழ்நாடு எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இருப்பதால், தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆர்வத்தோடு அதிமுகவைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தலைமையிடம் விருப்ப மனு அளித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச்செயலாரும் தமிழ்நாடு எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆசியோடும்,  தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதனின் வாழ்த்துகளுடனும், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் வழக்கறிஞர்  சரவணபெருமாள் அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனு அளித்துள்ளார்.