தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில் ஸ்ரீமஹா காலபைரவர் மிகப்பிரம்மாண்டமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

காலபைரவருக்கு மாதம் தோறும் அமாவாசை, தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஜப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மஹா காலபைரவருக்கு மஞ்சள், பால், தயிர், பன்னீர், இளநீர், புனுகு அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து மஹா காலபைவரவர் மலர்களாலான சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்க ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றது.

தொடர்ந்து, பக்தர்கள் வாழ்வில் கடன்தொல்லைகள், எதிரித்தொல்லைகள் யாவும் நீங்கிடவும், செல்வங்கள் பெருகிடவும் வேண்டி ஸ்ரீமஹா காலபைரவருக்கு மஹா யாகத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. முடிவில், பக்தர்களுக்கு மகா அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.