கலைஞர் நினைவு நாள் : சண்முகையா எம்எல்ஏ மரியாதை!
நிருபர்
August 07, 2025
கலைஞரின் திருவுருவப்படத்திற்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு ஒன்றிய திமுக செயலாளருமான எம்.சி.சண்முகையா மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கலைஞரின் திருவுருவப்படத்திற்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு ஒன்றிய திமுக செயலாளருமான எம்.சி.சண்முகையா மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் 7ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் திமுக மேற்கு ஒன்றியம் அயிரவன்பட்டியில், கலைஞரின் திருவுருவப்படத்திற்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு ஒன்றிய திமுக செயலாளருமான எம்.சி.சண்முகையா, முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில், திமுக ஒன்றிய தொழிலாளர் அணி அமைப்பாளர் கருப்பசாமி, இளைஞரணி பாலமுருகன், அலெக்ஸ், கிளை செயலாளர்கள் மாரியப்பன், ராமகிருஷ்ணன், சமுத்திரவேல் மற்றும் மகளிரணி நிர்வாகிகள், திமுக தொண்டர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.