மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்த ஓபிஎஸ் மகன் ஜெய பிரதீப் : சட்டமன்ற தேர்தலில் போட்டியா?
நிருபர்
March 08, 2021
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்த ஓபிஎஸ் மகன் ஜெய பிரதீப் : சட்டமன்ற தேர்தலில் போட்டியா?

தமிழக துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப் பாளருமான ஓ.பன்னீர் செல்வத்தின் இளைய மகன் ஜெய பிரதீப் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் கம்பம் சட்டமன்ற தொகுதியில் ஜெய பிரதீப் போட்டியிட உள்ளதாக தகவல் கசிந்து வருகிறது.

இதுவரை ஆன்மீக செம்மல் பட்டத்துடன் மேல் மட்ட அரசியல் செய்து கொண்டிருந்த ஜெய பிரதீப் இனி அரசியல் களத்தில் நேரடியாக இயங்கிட உள்ளார்.

இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதல் தான், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் திடீர் சிறப்பு தரிசனம் என காரணம் சொல்லப்படுகிறது.

மேலும், அரசு தொடர்பான உயர் பொறுப்பில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் மரியாதையை கோவில் அரசு நிர்வாகிகள், காவல்துறையினர் அவருக்கு கொடுத்துள்ள விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.