தூத்துக்குடி மாநகராட்சியில் 4 மண்டலங்களில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் கடந்த சில மாதங்களாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் சாலைகளில் செல்லும் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், மாணவ, மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

இது குறித்து மாநகர சுகாதாரத் துறையினர் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி தெரு நாய் தொல்லைகளில் இருந்து பொது மக்களை காக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாநகராட்சி மேயர் உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாநகர பகுதிகளில் தெரு நாய்கள் தொடர்பான புகார்களுக்கு 18002030401 என்ற கட்டணமில்லாத எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார்.