தொடர் கண்காணிப்பு... நிர்வாகிகளை களையெடுக்கும் அதிமுக!
நிருபர்
June 29, 2025
பிற கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படுவோரை கண்காணித்து நீக்கும் நடவடிக்கையை அதிமுக தலைமை துவங்கி உள்ளது.

பிற கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படுவோரை கண்காணித்து நீக்கும் நடவடிக்கையை அதிமுக தலைமை துவங்கி உள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் தொடர் தோல்விகளை அதிமுக சந்தித்து வருவதால் 2026 சட்டமன்ற தேர்தல் அதிமுகவுக்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனால் பாஜகவுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டு தேர்தல் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

இந்த நிலையில், அதிமுக நிர்வாகிகள் சிலர் பிற கட்சிகளுக்கு ஆதரவளிப்பதாக அதிமுக தலைமைக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாம்.

அதன் தொடர்ச்சியாக, தமிழக கட்சி கழக தலைவர் விஜய் பிறந்தநாளில் அவரது புகழ் பாடி திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை தலைவராக இருந்த ஆனந்தகுமார் வலைதளங்களில் பதிவிட்டிருந்தார் இதனை அடுத்து கட்சி உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

மாற்றுக் கட்சியினருக்கு ஆதரவு அளிப்பவர்களால் கட்சி பலவீனமடையும். அவர்களை நீக்கிவிட்டு முதியோர்களுக்கு வாய்ப்பு கொடுக்க அதிமுக தலைமை தீர்மானித்துள்ளதாகவும், எனவே சமூக வலைதளங்களில் நிர்வாகிகளின் பக்கங்களை கண்காணிக்கும் பணி நடந்து வருவதாகவும் அதிமுக கட்சி வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.