தூத்துக்குடி மாவட்டத்தில் 15 வழித்தடங்களுக்கு மினி பஸ் இயக்க அனுமதிச்சீட்டு வேண்டி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு அரசாணை எண். 198 உள் (போக்குவரத்து) நாள் 28.04.2025 ன் படி தூத்துக்குடி மாவட்ட அரசிதழ் எண்.20 நாள் 09.06.2025-ல் தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக கண்டறியப்பட்ட கீழ்காணும் 15 வழித்தடங்களுக்கு சிற்றுந்து ( மினி பஸ் )  இயக்க அனுமதிச்சீட்டு வேண்டி விண்ணப்பிக்க விரும்புவோர் புதிய மினிப்பேருந்துக்கான SCPA விண்ணப்பப்படிவத்தினை Parivahan மூலமாக விண்ணப்பித்து ஆன்லைனில் கட்டணம் ரூ.1500+100=1600/- மற்றும் கால நிர்ணய கட்டணம் ரூ.600/- ஆக மொத்தம் ரூ.2200/- செலுத்தி விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து விலாசசான்றுக்கான ஆவணத்துடன் உரிய இணைப்புகளுடன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் 11.06.2025 அன்று நண்பகல் 12.00 மணிக்குள் நேரில் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்கைக்குட்பட்ட வழித்தடங்களான பழைய பேருந்து நிலையம் முதல் மீனாட்சிபுரம், பழைய பேருந்து நிலையம் முதல் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி, டேவிஸ்புரம் முதல் பாலிக்டெனிக், பாலிக்டெனிக்  முதல் டேவிஸ்புரம், ஒட்டநத்தம் (சங்கம்பட்டி) முதல் புதியம்புத்தூர் மேலமடம் பேருந்து நிறுத்தம், பசுவந்தனை பேருந்து நிறுத்தம் முதல் எப்போதும் வென்றான் பேருந்து நிறுத்தம், புதுக்கோட்டை முதல் ஹார்பர் வாட்டர் ஆகிய 07 வழித்தடங்களுக்கும்

திருச்செந்தூர் வட்டாரப்போக்குவரத்து அலுவலக எல்கைக்குட்பட்ட வழித்தடங்களான ஏரல்  முதல்  முடிவைத்தானேந்தல்  (வழி)  வாகைக்குளம், முருகேசபுரம் முதல் செட்டியாபத்து, கற்குவேல் அயயனார் கோவில்   திருச்செந்தூர் எம்எல்ஏ ஆபிஸ், சங்கர நயினார்புரம்  சிவன்  கோவில்   சாத்தான்குளம், குலசை கடற்கரை ரோடு   திருச்செந்தூர்  பஸ் ஸ்டாண்ட், ரெயில்வே  கேட்  ரோடு  நாசரேத்   சாத்தான்குளம்  பஸ் ஸ்டாண்டு, செட்டியாபத்து   திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட், முஸ்லீம்  தெரு ,  குலசை திருச்செந்தூர் பஸ்   ஸ்டாண்டு ஆகிய 08 வழித்தடங்களுக்கும் ஆக மொத்தம் 15 வழித்தடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இணைக்கவேண்டிய படிவம் மற்றும் ஆவணங்கள்

1. SCPA Form with fees of Rs. 1500+100+600/-

2. Address evidence

3. Road worthy certificate from A.E/D.E. Highways

4. Tentative timings

5. Route –Map/Sketch

6. Solvency Certificate உள்ளிட்ட ஆவணங்களுடன் இணைத்து விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் / வட்டாரப் போக்குவரத்து அதிகாரி இளம்பகவத்  தெரிவித்துள்ளார்