மாநிலங்களவைத் தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!
நிருபர்
June 01, 2025
அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்களாக தனபால் மற்றும் இன்பதுரை ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்களாக தனபால் மற்றும் இன்பதுரை ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து தேர்வான 6 மாநிலங்களவை எம்.பிக்களின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவடைகிறது.

பிரதிநிதித்துவ அடிப்படையில் திமுகவிற்கு கிடைக்கும் 4 இடங்களை மூன்று தன்வசப்படுத்தி இருக்கிறது திமுக. அந்த இடங்களுக்கு வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, சேலம் மாவட்டச் செயலாளர் சிவலிங்கம் ஆகியோரைக் களமிறக்கிய திமுக, மீதமுள்ள ஒரு இடத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனுக்குக் கொடுத்திருக்கிறது.

அதேபோல, பிரதிநிதித்துவ அடிப்படையில் அதிமுக விற்கு இரண்டு எம்.பிக்கள் சீட் கிடைத்திருக்கின்றன. இவற்றைப் பெற, அதிமுக விற்குள் கடுமையான போட்டி நிலவியது.

இந்த நிலையில், அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியல் இன்று (சனி, ஜூன் 1, 2025) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவரான தனபால் மற்றும் முன்னாள் அமைச்சர் இன்பதுரை ஆகியோர் அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.