தூத்துக்குடி புதிய துறைமுகத்திலிருந்து கேம்ப் 1 வழியாக முத்துநகர் சந்திப்பு புதிய பாலம் கட்டுமிடத்தில்  அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.

அப்போது மர்மநபர் கல்வீசி தாக்கியதில் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. இது குறித்த புகாரின் பேரில் தெர்மல் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் கல் எறிந்தவர் மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநில வாலிபர் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.