தூத்துக்குடி பியல் சிட்டியிலிருந்து மில்லியன் டாலர் சிட்டியாகிறது!
நிருபர்
March 23, 2025
தூத்துக்குடி பியல் சிட்டினு பேர் வாங்கின ஒரு கடலோர நகரம். இங்க வெறும் முத்து குளித்தல், மீன்பிடிப்பு, உப்பு உற்பத்தி, மீன் வியாபாரம்னு மட்டும் நடந்துகிட்டு இருந்த நகரம் இனி இல்லை. இப்போ இந்த ஊர் தமிழ்நாட்டின் தொழில் வரைபடத்துல ஒரு பெரிய சிவப்பு புள்ளியா ம

தூத்துக்குடி பியல் சிட்டினு பேர் வாங்கின ஒரு கடலோர நகரம். இங்க வெறும் முத்து குளித்தல், மீன்பிடிப்பு, உப்பு உற்பத்தி, மீன் வியாபாரம்னு மட்டும் நடந்துகிட்டு இருந்த நகரம் இனி இல்லை. இப்போ இந்த ஊர் தமிழ்நாட்டின் தொழில் வரைபடத்துல ஒரு பெரிய சிவப்பு புள்ளியா மாறுது.

பெரிய பெரிய முதலீடுகள், புது தொழில் நுட்பங்கள், சர்வதேச கம்பெனிகளோட கைக்குலுக்கல்னு ஒரே சமயத்துல பல சமாச்சாரங்கள் தூத்துக்குடியில் நடக்குது. இதுக்கு முன்னாடி சென்னை, கோவை, ஓசூர் தான் தமிழ்நாட்டோட தொழில் மையங்களா பேசப்பட்டது. ஆனா, இப்போ தூத்துக்குடி "நானும் களத்துல வந்துட்டேன்"னு இறங்கி ஆட்டத்தை மாத்துது.

தூத்துக்குடியில மட்டும் 1,40,000 கோடி ரூபாய் முதலீடு வரப்போகுது. இது சும்மா ஒரு எண்ணிக்கை இல்லை. இது ஒரு மாபெரும் தொழில் புரட்சியோட அறிகுறி.

வியட்நாமைச் சேர்ந்த இந்த வின்பாஸ்ட் எனும் எலக்ட்ரிக் வாகன (EV) ஜாம்பவான் தூத்துக்குடியில் வந்து இறங்கிட்டான். தூத்துக்குடியில் 16,000 கோடி ரூபாய்க்கு ஒரு மெகா தொழிற்சாலையை உருவாக்கும் பணியை தொடங்கி இப்போ கட்டுமானம் 90% முடிஞ்சு, 3 மாசத்துல உற்பத்தி தொடங்கப் போகுது. இதனால, தூத்துக்குடி தமிழ்நாட்டோட 4 வது ஆட்டோ கிளஸ்டரா (சென்னை, கிருஷ்ணகிரி, கோவைக்கு அப்புறம்) மாறுது.

தூத்துக்குடியை இந்தியாவோட "க்ரீன் ஹைட்ரஜன் ஹப்" ஆக்க தீவிரமா வேலை நடக்கு. சிங்கப்பூரைச் சேர்ந்த Sembcorp ஒரு கம்பெனியே 36,200 கோடி ரூபாய் போடுது. இது பசுமை எரிசக்தி துறையில ஒரு பெரிய முன்னேற்றம்.

தற்போது 4 சிப்காட் தொழிற்பூங்காக்கள் இயங்குது. 3 புதுசு முழு வேகத்துல உருவாகுது. இன்னும் 3 பைப்லைன்ல இருக்கு. இதனால சென்னைக்கு அடுத்தபடியா தமிழ்நாட்டுல அதிக சிப்காட் பூங்காக்களை கொண்ட ஊரா தூத்துக்குடி மாறப் போகுது.

தூத்துக்குடி ஏன் இவ்வளவு பெரிய தொழில் மையமா மாறுது தெரியுமா?

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் இந்தியாவோட முக்கிய துறைமுகங்கள்ல ஒண்ணு. இங்கிருந்து ஏற்றுமதி, இறக்குமதி சுலபமா நடக்குது. பெரிய கம்பெனிகளுக்கு இது ஒரு பெரிய பிளஸ்.

தூத்துக்குடியோட சாலை, ரயில் இணைப்பு சிறப்பா இருக்கு. மதுரை - தூத்துக்குடி தொழில் நெடுஞ்சாலை திட்டமும் இதுக்கு பக்கபலமா இருக்குது.

தூத்துக்குடி ஒரு காலத்துல பவர் ஜெனரேஷன் ஹப்பா இருந்தது. இப்போ பசுமை எரிசக்தி திட்டங்களோட மீண்டும் எழுந்து வருது. சோ மின்சாரம் பிரச்சனையும் இல்லை.

சொந்த ஊரை விட்டு போக விரும்பாத தூத்துக்குடி இளைஞர்களுக்கும் ஒரு மகிழ்ச்சி இருக்கு. ஆமாங்க, வின்ஃபாஸ்ட் மட்டும் 3,500 பேருக்கு வேலை கொடுக்கப் போகுது. மொத்தமா பல்லாயிரக்கணக்கான வேலைகள் உருவாகும். தெற்கு மாவட்டங்கள்ல இளைஞர்கள் வெளியூருக்கு வேலை தேடி போறது குறையும். "தூத்துக்குடியிலேயே வேலை, வாழ்க்கை"னு ஒரு புது ட்ரெண்ட் ஆரம்பமாகுது.

அடுத்த சில வருஷத்துல தூத்துக்குடி பேர் இந்தியா முழுக்க மட்டுமில்ல, உலக அரங்குலயும் ஒலிக்கும்.