தூத்துக்குடியில் மகளிர் சுய உதவி குழு தலைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாக அவரது மருமகனை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் சிவராஜபுரத்தைச் சேர்ந்தவர் பீட்டர் மனைவி பெர்மினா (54), அந்த பகுதியில் மகளிர் சுய உதவி குழு தலைவியாக உள்ளார். இவரது தங்கையின் மகள் கணவரான லூர்தம்மாள் புரத்தை சேர்ந்த தனபாலன் மகன் அண்டன் (26) என்பவர் பெர்மினாவிடம் ரூ.1லட்சத்து 20 ஆயிரம் கடன் வாங்கினாராம்.

ஆனால், அந்த கடனை திருப்பி செலுத்தவில்லையாம். இதனால் பெர்மினா போன் மூலம் அண்டனிடம் பணத்தை கட்டுமாறு கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அடைந்த அண்டன் பெர்மினா வீட்டுக்கு சென்று அவரிடம் தகராறு செய்து அவரை கையால் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்தாராம்.

அப்போது வீட்டில் இருந்தவர்கள் பார்த்து சத்தம் போடவே அங்கிருந்து அண்டன் ஓடிவிட்டாராம். இதில் காயம் அடைந்த பெர்மினா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து  புகாரின் பேரில் தாளமுத்து நகர் காவல் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.