பெட்ரோல் டீசல் விலை குறைக்க இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டுருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை கடந்த 15 நாட்களாக உயர்ந்து 100 ரூபாயை நோக்கி வெற்றி நடைபோட்டு கொண்டு இருக்கிறது. இதனால் அதன் வரிசுமையை குறைக்க மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டுருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்குக்கு மத்திய அரசு அறிவித்து வந்த நிலையில், கொரோனா மீட்பு நடவடிக்கையாக வரிகள் உயர்த்தப்பட்டதால் விலை கடுமையாக ஏறியது. பெட்ரோல், டீசல் விலையில் 60சதவீத தொகை அதன் வரிகளுக்கே போய்விடுகிறது.

இது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளுடன் மத்திய நிதியமைச்சகம் ஆலோசையில் ஈடுபட்டுள்ளது. விரைவில் வரி குறைப்பு மூலமாக பெட்ரோல்,டீசல் விலை குறைக்கப்படும்  என்று தகவல் வெளியாகியுள்ளது