தூத்துக்குடியில் அருகே முத்தையாபுரத்தில் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் ஒருவரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் பொன்னாண்டி நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் குமாரசாமி (48). கூலி தொழிலாளி. முத்தையாபுரம் மேல தெருவை சேர்ந்தவர் தனுசுராஜ் மகன் அருண்பாண்டி (32) மெக்கானிக். இவர்கள் இருவரும் நேற்று இரவு அப்பகுதியில் மது அருந்திபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அருண்பாண்டி, குமாரசாமியை அரிவாளால் வெட்டினாராம்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.