அதிமுகவிற்கு கிடைத்த இறையருள்தான் எடப்பாடி பழனிசாமி என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்:-

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறுவடிவமாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுகவை மீட்டெடுத்து இயக்கத்தை காப்பாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.

களத்தில் மக்களை சந்தித்து உண்மையை எடுத்துச் செல்வோம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டுவர அயராது உழைப்பவர் எடப்பாடி பழனிசாமி.

மக்கள் சக்திதான் ஒரு இயக்கத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும். அந்த சக்தியை அதிமுக பெற்றுள்ளது. அதிமுக வுக்கு எந்த சக்தியாலும் சேதாரத்தை ஏற்படுத்தி விடமுடியாது. விவேகத்துடன் செயல்பட்டு 4 ஆண்டுகள் முழு ஆட்சியையும் சிறப்பாக நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி

அதிமுகவுக்கு வரும் சோதனைகளை தொண்டர்கள் மன வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும். எதிரிகள் மற்றும் துரோகிகளின் வாதங்களால் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது. என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.